வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைப்பு. அடுத்தாண்டு ஜனவரி 2இல் தொடங்கி 10ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடிக்க உத்தரவு; மற்ற மாவட்டங்களைப் போல அரையாண்டு விடுமுறை 3 மாவட்டங்களுக்கும் பொருந்தும் என அறிவிப்பு.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் இன்று மாலை 4.04 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. ‘புரோபா-3’ திட்டத்தின் கீழ் சூரியனின் ஒளிவட்ட பகுதியை ஆய்வு செய்ய இருக்கும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வடிவமைத்துள்ள கரோனாகிராஃப் மற்றும் ஆக்குள்டர் ஆகிய செயற்கைக்கோள்களை பி.எஸ்.எல்.வி-சி59 ராக்கெட் விண்ணில் நிலைநிறுத்தி உள்ளது.
புயல் வெள்ள நிவாரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத்தொகை ரூ.2000/- வழங்க இன்று முதல் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று (05.12.2024) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
The cost of gold has increased to Rs. 80 per sovereign on Thursday Morning (December 05, 2024). The cost of the gold rate has increased to Rs. 10 per gram.
The gold rate has increased and one sovereign was worth Rs. 57120.00 and a gram was Rs. 7140.00.
The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 7788.00.
A kilo of silver is priced at Rs. 101,000.00 and a gram is worth Rs. 101.00.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (04.12.2024) விநாயகர்- மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர்- மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் – வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் – வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர்- அதிகார நந்தி வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.