திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மலை மீது ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு தீப மை நெற்றியில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜ பெருமான் 1000 கால் மண்டபத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருமஞ்சன கோபுர வாயில் வழியாக கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை தீபத்திருவிழா நிறைவடைந்ததையொட்டி அண்ணாமலையார் கோயிலில் புனித நீருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோயில் ஊழியர்களால் மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. தீப மலையின் மீது உள்ள அண்ணாமலையார் பாதத்தில் பிராயச்சித்த பரிகார பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மகா தீப மலையில் தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை மகா தீப மலையில் தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜை!

திருவண்ணாமலை மகா தீப மலை மீது தீபத் திருவிழா நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று மலையின் மீது தெளிக்க உள்ள புனித நீருக்கு அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு யாகத்துடன், சிறப்பு பூஜை நடைபெற்றது.

திருவண்ணாமலை மலையிலிருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை மலையிலிருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கடந்த 26 ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மகா தீபத்தை தரிசித்தனர். மகா தீபம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து இன்று (07.12.2023) மலையில் இருந்து மகா தீப கொப்பரையை கீழே இறக்கும் பணி தொடக்கம்.

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் இன்றுடன் நிறைவு!

அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபம் இன்றுடன் நிறைவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின் மலை மீது ஏற்றப்பட்ட மகாதீபம் இன்றுடன் (06.12.2023) நிறைவு பெறுகிறது. நாளை (07.12.2023) காலை மகா தீபம் ஏற்றப்பட்ட கொப்பரை அண்ணாமலையார் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இனிதே நிறைவு!

திருக்கார்த்திகை தீபத்திருவிழா அருள்மிகு சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் இனிதே நிறைவு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 17 – ஆம் தேதி திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்கியது. தொடர்ந்து 23-ந் தேதி தேரோட்டம் நடந்தது.

இதையடுத்து சிகர நிகழ்ச்சியாக கடந்த 26 – ஆம் தேதி மகாதீபம் திருவண்ணாமலை மலை மீது ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மக்களும், தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும், ஆந்திர, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றார்கள்.

அதைத்தொடர்ந்து 27 – ஆம் தேதி அய்யங்குளத்தில் சந்திர சேகரர் தெப்பல் உற்சவம், 28 – ஆம் தேதி பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம், 29 – ஆம் தேதி சுப்பிரமணியர் தெப்பல் உற்சவம் நடந்தது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் நிறைவாக நேற்று (30.11.2023) ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]