திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் மார்கழி மாத மஹோத்ஸவம் இன்று (27.12.2023) நடைபெற்றது. இதில் நடராஜர் சிவகாமி அம்மாள் அவர்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டு பிறகு மாடவீதி உலா நடைபெற்றது.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை இன்று நிறைவு!

சபரிமலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து நடைபெறும் வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகின்றன. தொடர்ந்து காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரையிலான முகூர்த்த வேளையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் மண்டல பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறும். பின்னர் பிற்பகல் 1 மணிக்கு வழக்கம்போல் நடை அடைக்கப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

தொடர்ந்து வழக்கமான பூஜைகள், வழிபாடுகளுக்குப் பின்னர் இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்பட்டு 41 நாட்கள் நடைபெற்ற மண்டல கால பூஜை நிறைவு பெறுகிறது. அதன் பிறகு டிச.30 மகரவிளக்கு பூஜைக்காகத் திறக்கப்படும். ஜன.15 சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நடைபெறவுள்ளது.

கோடை விடுமுறை காலத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

கோடை விடுமுறை காலத்தில் பயணம் மேற்கொள்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்..!

வரும் ஆண்டில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை காலத்தில் பயணம் மேற்கொள்வோர், விரைவு ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர். 120 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி இருப்பதால், கோடை விடுமுறையில் பயணம் மேற்கொள்ளவும், சிலர் டிக்கெட் முன்பதிவு செய்து வருகின்றனர்.

Gold Rate Increased Today Morning (27.12.2023)

Gold Rate Increased Today Morning (27.12.2023)

The cost of gold has increased to Rs. 40 per sovereign on Wednesday Morning (December 27, 2023). The cost of the gold rate has increased to Rs. 5 per gram.

The gold rate has increased and one sovereign was worth Rs. 47200.00 and a gram was Rs. 5900.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 6370.00.

A kilo of silver is priced at Rs. 80700.00 and a gram is worth Rs. 80.70.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) ஆருத்ரா தரிசனம்!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் இன்று (27.12.2023) சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டன. திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மலை மீது ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தீப மை சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு தீப மை நெற்றியில் வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சிவகாமி சமேத நடராஜ பெருமான் 1000 கால் மண்டபத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு திருமஞ்சன கோபுர வாயில் வழியாக கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.