திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள்!

திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்காக அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பேருந்து நிலையங்கள்:

தற்காலிக பேருந்து நிலையம் (திருவண்ணாமலை) மார்க்கம்
வேலூர் ரோடு – Anna Arch போளூர், வேலூர், ஆரணி, ஆற்காடு, செய்யாறு
அவலூர்பேட்டை ரோடு – SRGDS பள்ளி எதிரில் சேத்துப்பட்டு. வந்தவாசி, காஞ்சிபுரம்
திண்டிவனம் ரோடு – ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, தாம்பரம், அடையாறு, கோயம்பேடு
வேட்டவலம் ரோடு – சர்வேயர் நகர் வேட்டவலம், விழுப்பரம்
திருக்கோவிலூர் ரோடு – ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில், திருக்கோயிலூர், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், திட்டக்குடி, விருத்தாச்சலம், நாகப்பட்டினம், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி
அருணை மருத்துவக் கல்லூரி அருகில் மற்றும் வெற்றி நகர் செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூரு, ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர்
மணலூர்பேட்டை ரோடு – செந்தமிழ் நகர் மணலூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, தானிப்பாடி, சாத்தனூர் அணை
செங்கம் ரோடு – அத்தியந்தல் மற்றும் சுபிக்க்ஷா கார்டன் செங்கம், தருமபுரி, திருப்பத்தூர், சேலம், பெங்களூரு, ஓசூர், ஈரோடு, கோயம்புத்தூர்
காஞ்சி ரோடு – டான் பாஸ்கோ பள்ளி காஞ்சி, மேல்சோழங்குப்பம்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு இரயில்கள் இயக்கம்!

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக சிறப்பு இரயில்கள் இயக்கம்!

சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 4 கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கம், டிக்கெட் முன்பதிவும் உடனடியாக துவங்கப்பட்டுள்ளது.

 
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி (21-11-2023) நேற்று நடைபெற்றது.

 
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளன்று மலை மீது ஏறும் பக்தர்களுக்கு நிபந்தனை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளன்று மலை மீது ஏறும் பக்தர்களுக்கு நிபந்தனை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருநாளன்று மலை மீது ஏறும் பக்தர்களுக்கு நிபந்தனைகள்:

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 26.11.2023 அன்று 2,500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டது.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளான 26.11.2023 அன்று காலை 05.00 மணிக்கு திருவண்ணாமலை நகரம் செங்கம் சாலை கலைஞர் கருணாநிதி அரசுக் கலை கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2,500 பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வரிசை கிரமமாக புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்கப்படும்.

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் முதல் அதிக பட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

மலை ஏற அனுமதி கோரும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை மற்றும் பிற இதர அரசு அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகல் மற்றும் மருத்துவ அலுவலரிடம் உடல் தகுதி சான்று பெற்றுக்கொள்ள வேண்டும்.

கோயில் கோபுரம் அருகில் உள்ள வழியில் மட்டுமே மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வழிகளில் மலை ஏற கண்டிப்பாக அனுமதி வழங்கப்பட மாட்டாது.

மலை ஏறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். மேலும், காலி தண்ணீர் பாட்டில்களை மலையிலிருந்து இறங்கி வரும்போது திரும்க கொண்டுவர வேண்டும்.

மலை ஏறும் பக்தர்கள் கற்பூரம், பட்டாசு மற்றும் எளிதில் தீப்பிடிக்க கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றம் கடந்த 17-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை தொடங்கியது. நவ. 26-ஆம் தேதி 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – ஐந்தாம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2023 – ஐந்தாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (21.11.2023 ) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரியரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.