ஷ்தல வரலாறு

கேரளா எல்லையிலிருக்கும் சோட்டானிக் கரை பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற நான்.அங்கு ஒருவரை சந்தித்தேன்,அவர் என் குடும்பத்தில் நடந்தது நடத்து கொண்டு இருப்பது நடக்க இருப்பது எல்லாவற்றையும் அப்படியே சொல்லிவிட்டார்.அதற்கு பரிகாரமும் செய்து கொடுத்தார். அன்று முதல் எங்கள் குடும்பத்தில் இன்னல்கள் நீங்கி நல்லதே நடக்கிறது.கேரளா சாமியாரிடம் அழைத்துச் சென்றார்  உட்காருங்கள் தம்பி நல்லா இருக்கிறிர்களா குடும்பத்தில் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா என்று லாரி டிரைவரிடம் விசாரித்தார்.பிறகு பூஜை அறைக்குள் சென்று திரும்பி வந்து என் முகத்தைப் பார்த்து ஏற்கனவே என்னைப்பார்த்து போலவும்,என் பக்கத்து விட்டுகாரரைப் போலவும் எனக்கு நடந்ததையும், எங்கள் குடும்பத்தில் நடந்ததையும் அப்படியே சொல்லிவிட்டார். அப்பொழுது கூடவே மற்றொன்றும் சொன்னார் தம்பி எனக்கென்று சொந்தம் என்று சொல்லிக் கொள்ள இந்த சோட்டானிக்கரை பகவதியைத் தவிர வேறு யாரும் இல்லை என் மனதில் உள்ள பாரத்தை யாரிடமாவது இறக்கிவிடனும் நான் கற்றவித்தையை எனக்கு 98 வயதாகிரது நான் இறப்பதற்குள் இந்த வித்தையை யாருக்காவது கற்றுத்தர வேண்டும் என்ற மனவேதனையுடன் இருந்தேன்.உன்னைப் பார்த்ததும் நீ அதற்குத் தகுதியானவன் என்று மனவேதனையுடன் இருந்தேன். உன்னைப் பார்த்ததும் நீ அதற்குத் தகுதியானவன் என்று மனவேதனையுடன் இருந்தேன். இவைகளையெல்லாம் கற்றக் கொள்ள ஒரு 6 மாதமாவது ஆகும் நீ என்னுடன் இருந்து பொறுமையாக இதை கற்றுக் கொள்வாயா? என்று அவர் கேட்டார்.நானும் அதை சந்தோசத்துடம் ஒப்புக் கொண்டேன்.அன்று முதல் நானும் அந்த வயதான மந்திரவாதி தாத்தாவும் உறவுக்காரர்களை போல நெருங்கிப் பழகினோம். சாப்பிடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அவர் கற்ற வித்தைகளையும் செய்த லீலைகளையும் எனக்கு கற்றுக் கொடுத்தார்,பிறகு ஒருநாள் அந்த வயதான பெரியவரை தேடி காரைக்குடியிலிருந்து அவருடைய உறவினர் முவர் வந்து சாகும் நேரத்தில் கூட ஏன் இந்த வைராக்கியத்துடன் நீ இருக்கிறாய் எங்களை மன்னித்து விட்டு நீங்கள் எங்களுடன் விட்டிற்கு வாருங்கள் என்று அழைத்தனர். வயது ஆகிவிட்டது என்பதாலும் பெரியவரும் ஒப்புக் கொண்டார்.அவர்கள் சென்றதும் என்னை அந்தப் பெரியவர் அவரருகே அழைத்து என்னைகட்டிப் பிடித்து என்னுடைய பாரங்கள் அனைத்தையும் உன்னுடன் தருகிறேன் உன்னால் 10 குடும்பங்களாவது வாழட்டும் யாரையும் பழிவாங்காதே என்று என்னிடம் கூறி ஒரு கிண்ணத்தில் தண்ணீரும், ஒரு கிண்ணத்தில் எண்ணையும்,ஒரு கிண்ணத்தில் நெருப்பும் வைத்துக்கொண்டு அதன்மீது என்னை நல்லதை தவிர யாருக்கும் கெடுதல் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்யச் சொன்னார். நானும் சத்தியம் செய்தேன்.பிறகு அவரிடம் இருந்த ஓலைச்சுவடி செப்புத்தகடுகள் ஒரு பகவதி அம்மன் பஞ்சலோக சிலை இவையனைத்தையும் என்னிடம் கொடுத்து இன்னும் ஒருமணி நேரத்தில் எனது உறவுக்காரர்கள் எல்லாம் வந்து விடுவார்கள் அவர்கள் வந்தால் இதை உன்னிடம் தரமாட்டார்கள் எனவே அவர்கள் வருவதற்குள் நீ சென்றுவிடு என்று எனக்கு ஆசீர்வாதம் செய்தார்.நானும் அவரது பாதங்களை தொட்டு வணங்கி விட்டு வருகிறேன் என்று சொல்லி புறப்பட்டு வந்துவிட்டேன்.

பூஜைகள்

தின பூஜைகள்

  • காலை 8 மணி பூஜை
  • நன்பகல் 12 மணி பூஜை மற்றும
  • மாலை 6 மணி பூஜை

வாராந்திர சிறப்பு பூஜைகள் – செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, இத்தினங்களில் அருள்வாக்கு நடைபெரும்.

மாதாந்திர பூஜைகள்  - அமாவாசை அன்று நண்பகல் 12 மணி அளவில் சிறப்பு உச்சிகால பூஜை நடத்தப்படும்.

இருப்பிடம்:

வேலூர் to பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, வேலுரிளிருந்து 12 கி.மீ தொலைவில் செதுவாலை அடுத்த இறைவன் காடு பகவதி அம்மன் திருக்கோவில் பாலற்றங்கறையில் அமைந்துள்ளது.

முகவரி:

தி. ஸ்ரீ சம்பத் அடிகளார்,
ஸ்ரீ பகவதி அம்மன் ஆலயம்,
இறைவன் காடு  - 632104,
வேலூர்,
தமிழ் நாடு, இந்தியா.

Mobile No : 9443104200
Email id : contact@eraivankadubhagavathyamman.com

BACK