அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்!
திருக்கார்த்திகை தீப திருவிழா – 2024 திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு 64 அடி உயர தங்க கொடி மரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக இன்று ( 04.12.2024 ) தொடங்கியது. பின் வெள்ளி இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்று வருகிறது.
இதில் பல்லாயிர கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் 10 நாட்களும் திருவிழா நடைபெறும். பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை ( 13.12.2024 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவை முன்னிட்டு பிடாரி அம்மன் உற்சவம்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ துர்க்கை அம்மன் திருவீதி உலா!
திருக்கார்த்திகை தீபத் திருவிழா – 2024
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில், கார்த்திகை மாதம் 19ம் தேதி (04.12.2024) புதன்கிழமை அன்று கொடியேற்றத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது. கார்த்திகை 28-ம் தேதி (13.12.2022) வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
01-Dec-2024 (ஞாயிறு): அருள்மிகு துர்க்கையம்மன் உற்சவம் ஆரம்பம்
02-Dec-2024 (திங்கள்): அருள்மிகு பிடாரி அம்மன் உற்சவம்
03-Dec-2024 (செவ்வாய்): அருள்மிகு விநாயகர் சண்டிகேஸ்வரர் உற்சவம்
04-Dec-2024 (புதன்): கொடியேற்றம் முதல் நாள் உற்சவம்
05-Dec-2024 (வியாழன்): இரண்டாம் நாள் உற்சவம்
06-Dec-2024 (வெள்ளி): மூன்றாம் நாள் உற்சவம்
07-Dec-2024 (சனி): நான்காம் நாள் உற்சவம்
08-Dec-2024 (ஞாயிறு): ஐந்தாம் நாள் உற்சவம் (வெள்ளி ரிஷபம்)
09-Dec-2024 (திங்கள்): ஆறாம் நாள் உற்சவம் (வெள்ளி ரதம்)
10-Dec-2024 (செவ்வாய்): ஏழாம் நாள் உற்சவம் (மகாரதம்)
11-Dec-2024 (புதன்): எட்டாம் நாள் உற்சவம்
12-Dec-2024 (வியாழன்): ஒன்பதாம் நாள் உற்சவம்
13-Dec-2024 (வெள்ளி): பத்தாம் நாள் உற்சவம்
காலை: பரணி தீபம்
மாலை: மகா தீபம்
14-Dec-2024 (சனி): தெப்பல் முதல் நாள் (ஸ்ரீசந்திரசேகரர்)
15-Dec-2024 (ஞாயிறு): தெப்பல் இரண்டாம் நாள் (ஸ்ரீபராசக்தி)
மகா தீபத்திற்கு 11,500 பேருக்கு அனுமதி!!
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் மகா தீபத்திற்கு 11,500 பேருக்கும், பரணி தீபத்திற்கு 7,500 பேருக்கும் அனுமதி 2668 அடி உயரத்தில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக 2,000 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் – மாவட்ட ஆட்சியர் திரு தெ .பாஸ்கர பாண்டியன்


