மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிப்பு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு அக்.,1 தேதிக்கு பிறகு பிறந்தவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கு, பிறப்புச்சான்று மட்டுமே, பிறந்த தேதிக்கான ஆதாரமாக கருதப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான CUET நுழைவுத்தேர்வு அட்டவணை வெளியீடு முதுநிலை படிப்புகளுக்கான CUET தேர்வு கணினி வழியில் மார்ச் 13 முதல் ஏப்.1 வரை நடத்தப்படுகிறது தேர்வுக்கான ஹால்டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை www.nta.ac.in தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
சிவராத்திரியை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோவிலில் உள்ள லிங்கோத்பவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மஞ்சள், சந்தனம், தயிர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வழியில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.