தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!

தமிழ்நாட்டில் அக்., 7ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்!

தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறையை நீட்டித்து பள்ளிக்கல்விதுறை உத்தரவு! அக்டோபர் 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அக்.,6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

நாளை செப்.,14 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடப்பதால் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவிப்பு.

காலாண்டுத்தேர்வு அட்டவணை வெளியானது!

காலாண்டுத்தேர்வு அட்டவணை வெளியானது!

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் 6 முதல் 12ம் வரை வகுப்புகளுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியானது. வரும் 28ம் தேதி முதல் அக்டோபர் 2 வரை தேர்வு விடுமுறை அறிவிப்பு! 6 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு வரும் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன.

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது!

தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பம் ஆன்லைன் மூலம் தொடங்கியது!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆகஸ்டு 8ம் தேதி மாலை 5 மணி வரை www.tnmedicalselection.net, tnhealth.tn.gov.in ஆகிய தளங்களில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். நள்ளிரவு 11:59 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

தமிழகத்தில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு!

2024-25 கல்வியாண்டில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 6-ல் வகுப்புகள் தொடக்கம் – பள்ளிக் கல்வித்துறை மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ல் நடந்து முடிந்த பின் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும்.