2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் நிகழ்வுகள்:

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மூன்றாம் நாள் காலை வேளையில் விநாயகர், சந்திரசேகரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் பூத வாகனத்தில் திருவீதிகளில் மாடவீதி உலா உள்ளனர். இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெறும்.

மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!

மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோபுரங்கள்!

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலின் கோபுரங்கள் மின்னொளி அலங்காரத்தில் மிளிருகின்றன. ஒளிவிளக்குகள் பதித்த நிலையில், ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து கோபுரங்களும் இரவு நேரத்தில் ஜொலித்து, பக்தர்களை கவரும் அழகில் திகழ்கின்றன.

[siteorigin_widget class=”WP_Widget_Media_Image”][/siteorigin_widget]

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெறவிருக்கும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2025 (24.11.2025, திங்கட்கிழமை)அன்று தொடங்க இருக்கிறது.

காலை, கொடியேற்றத்தால் விழா ஆரம்பமாக இருக்கிறது.
மாலை வேளையில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி விமானங்களில் வீதியுலா வர இருக்கின்றனர்.

இரவு, பக்தர்களின் உற்சாகத்தை கூட்டும் விதமாக வெள்ளி நந்தி, சிம்ம வாகனம், மயில் மற்றும் மூஷிக வாகனங்களில் சிறப்பு உற்சவம் ஒவ்வொரு வருடமும் நடைபெறும்.

திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதியா? – அமைச்சரின் விளக்கம்

திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதியா? – அமைச்சரின் விளக்கம்

திருவண்ணாமலையில் மலையேற்ற அனுமதி குறித்து எழுந்த கேள்விகளுக்கு அமைச்சர் முக்கியமான விளக்கத்தை வழங்கினார். இதுவரை திருவண்ணாமலையில் மலைச்சரிவு ஏற்பட்டதில்லை என்றும், கடந்த ஆண்டுதான் முதல்முறையாக சரிவு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு ஐஐடி நிபுணர்கள் அழைக்கப்பட்டு, மலைப்பகுதி முழுவதும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வில் மண்ணின் உறுதித்தன்மை குறைவு இருப்பதாகவும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக பக்தர்களை மலையேற அனுமதிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் பரிந்துரைத்ததாகவும் அமைச்சர் கூறினார்.

தற்போது திருவண்ணாமலையில் மழை பெய்து வருவதால் நிலைமை குறித்து அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தீபத்திருநாளில் மழை பெய்யுமா என்பது தெளிவாக தெரியாத நிலையில், அந்நாளில் நிலவும் ஈரப்பதம் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுமா இல்லையா என்ற முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 – வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் வெளியீடு!!

திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 – வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் வெளியீடு!!

2025-ஆம் ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு, திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பான மற்றும் சீரான இயக்கத்திற்காக மாவட்ட நிர்வாகம் விரிவான வாகன நிறுத்துமிட ஏற்பாடுகளை வெளியிட்டுள்ளது. பெரும்பான்மை கூட்டத்தை கருத்தில் கொண்டு தற்காலிக நிலையங்கள், தங்குமிட வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

24 தற்காலிக நிறுத்துமிடங்கள்:

மொத்தம் 24 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில்

11 முக்கிய (Main) நிலையங்கள்

13 மாற்று (Spare) நிலையங்கள்

பேருந்து நிறுத்த வசதி:

மொத்தம் 2,325 பேருந்துகள் நிறுத்தம் செய்யும் வசதி

Corporation பகுதியில் 109 இடங்கள்

  • Free – 87
  • Paid – 22

Rural பகுதியில் 21 இடங்கள்

  • Free – 17
  • Paid – 4

கார் நிறுத்தம்:

சுமார் 19,815 கார்கள் நிறுத்தும் வசதி

130 தனி கார் நிறுத்துமிடங்கள் கூட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள்:

அனைத்து இலவச தற்காலிக பேருந்து/கார் நிறுத்துமிடங்களிலும் பின்வரும் வசதிகள் வழங்கப்படும்:

  • குடிநீர் வசதி
  • கழிப்பறைகள்
  • போதிய விளக்குகள்
  • மேற்புற தாழ்வாண கட்டமைப்பு (மேற்கூரை)
  • பொது அறிவிப்பு முறை (PAS)
  • காவல் மையம்
  • தற்காலிக மின்சாரம் / ஜெனரேட்டர்
  • வழிகாட்டு பலகைகள்
  • தீ அணைப்பான் வசதி
  • அறிவிப்பு பலகைகள்

மழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்:

  • மழை காரணமாக ஏற்படக்கூடிய சிக்கல்களை தவிர்க்க, நிர்வாகம் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது:
  • மண், Gravel, Wetmix போன்றவை முன் கையிருப்பில் வைத்தல்
  • போதிய வடிகால் வாய்க்கால்கள்
  • நீர் தேக்கத்தைத் தவிர்க்க அவசர பராமரிப்பு குழுக்கள் தயார் நிலை

இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் சிரமமின்றி திருவிழாவைக் காண அனைத்து வசதிகளும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்!

கார்த்திகை தீப விழாவை முன்னிட்டு பராசக்தி அம்மன் தேர் வெள்ளோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சீரமைக்கப்பட்ட பராசக்தி அம்மன் தேர் இன்று காலை வெள்ளோட்டம் நடைபெற்றது.