திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான இன்று (26.11.2025) காலை விநாயகர், சந்திரசேகரர் பூத வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது.

கார்த்திகை தீபத் திருவிழா – 3ம் நாள் 1,008 சங்காபிஷேகம்!

கார்த்திகை தீபத் திருவிழா – 3ம் நாள் 1,008 சங்காபிஷேகம்!

அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள் நிகழ்வை முன்னிட்டு, சன்னதிக்கு அடுத்த பிரகாரத்தில் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. பின்னர் 1,008 சங்காபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டு பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான நேற்று (25.11.2025) இரவு வெள்ளி இந்திர வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாளான இன்று (25.11.2025) காலை அருள்மிகு சந்திரசேகரர் சூரிய பிரபை வாகனத்திலும் விநாயகர் மூஷிக வாகனத்திலும் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாளான நேற்று (24.11.2025) விநாயகர்- மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர்- மயில் வாகனத்திலும், அண்ணாமலையார் – வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், அம்மன் – வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர்- அதிகார நந்தி வாகனத்திலும் எழுந்தருளி மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்!

விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம்!

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்கும் நேற்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், இருவரும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.