திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஐந்தாம் நாளான இன்று (28.11.2025) காலை விநாயகர் ரிஷப வாகனத்திலும், சந்திரசேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்திலும், வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி!

கார்த்திகை தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி!

திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் தீபத் திருவிழா 7-ம் நாள் தேர்த் திருவிழாவிற்காக தேரில் கலசம் பொருத்தும் பணி நடைபெறுகிறது.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – நான்காம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – நான்காம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா நான்காம் நாளான நேற்று (27.11.2025) இரவு பஞ்ச மூர்த்திகளான  விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், கற்பக விருட்சம் வாகனத்திலும், பராசக்தி அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – நான்காம் நாள் காலை!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நான்காம் நாளான இன்று (27.11.2025) காலை விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் உண்ணாமுலை அம்மன் நாக வாகனத்திலும், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – மூன்றாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மூன்றாம் நாளான நேற்று (26.11.2025) இரவு சிம்ம மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொப்பரை தயார்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொப்பரை தயார்!

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொப்பரை தயார் நிலையில் உள்ளது. பத்தாம் நாளான புதன்கிழமை ( 03.12.2025 ) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.