திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம்!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் மகா தேரோட்டம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஏழாம் நாள் பஞ்ச மூர்த்திகள் நாள் மகா தேரோட்டம் நடைபெற்றது. இதில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டே தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.

பத்தாம் நாளான புதன்கிழமை (03.12.2025) அன்று அதிகாலை 04:00 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 06:00 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா ஆறாம் நாளான நேற்று (29.11.2025) இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரதத்திலும், வெள்ளி விமானங்களிலும் மாடவீதி உலா நடைபெற்றது.
மகாதீபம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!

மகாதீபம் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசனம் காண annamalaiyar.hrce.tn.gov.in இணையதளத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் காலை!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் காலை!

தீபத் திருவிழா ஆறாம் நாள், இன்று காலை வெள்ளி யானையில் சந்திரசேகரர் மாடவீதி உலா. 63 நாயன்மார்கள் உற்சவ மூர்த்திகளாக தனித்தனி வாகனங்களில் மாட வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கார்த்திகை தீபம் 2025: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விரைவில்!!

கார்த்திகை தீபம் 2025: ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு விரைவில்!!

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் 2025 நிகழ்வுக்கான பரணி தீபம் மற்றும் மகா தீபம் தரிசன டிக்கெட்டுகளின் ஆன்லைன் முன்பதிவு விரைவில் துவங்க உள்ளது.

முன்பதிவு செய்ய: annamalaiyar.hrce.tn.gov.in

டிக்கெட் விவரங்கள் (கடந்த ஆண்டின் தரவு அடிப்படையில்):

  -பரணி தீபம் – Rs.500 (500 டிக்கெட்)

  -மகா தீபம் – Rs.600 (100 டிக்கெட்)

  -மகா தீபம் – Rs.500 (1000 டிக்கெட்)

முன்பதிவு 01.12.2025 காலை  10.00 மணிக்கு திறக்கப்படும்.
அதிகாரப்பூர்வ புதுப்பிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் இரவு!

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் இரவு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஐந்தாம் நாளான நேற்று (28.11.2025) இரவு பெரிய நாயகர் வெள்ளி பெரியரிஷப வாகனத்திலும், அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.