Gold Rate Decreased Today Morning (25.07.2025)

Gold Rate Decreased Today Morning (25.07.2025)

The cost of gold has decreased by Rs. 45 per gram on Friday Morning (25.07.2025). The cost of the gold rate has decreased by Rs. 360 per sovereign.

The gold rate has decreased and one sovereign is worth Rs. 73680.00 and a gram is Rs. 9210.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10047.00.

A kilo of silver is priced at Rs. 128,000.00 and a gram is worth Rs. 128.00.

பிஎஸ்எம்எஸ், பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் 2025–26 மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஆகஸ்ட் 8ம் தேதி கடைசி நாள்

பிஎஸ்எம்எஸ், பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் 2025–26 மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு தொடக்கம் – ஆகஸ்ட் 8ம் தேதி கடைசி நாள்

சித்தா ஆயுர்வேத யுனானி ஒமியோபதி (பிஎஸ்எம்எஸ்), பிஎம்எஸ், பியுனானி, பிஎச்எம்எஸ் பட்டப்படிப்புகளுக்கு 2025–26 ஆம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, உரிய நகல்களுடன் ஆகஸ்ட் 8-ம் தேதி மாலை 5 மணிக்குள் செயலாளர், தேர்வுக் குழு, இந்திய மருத்துவம் – ஓமியோபதி துறை இயக்ககம், அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம், அரும்பாக்கம், சென்னை -600106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

இதை தவிர்த்து, விண்ணப்ப பதிவு செய்யும் கடைசி நாள் ஆகஸ்ட் 8ம் தேதி மாலை 5 மணி வரை என்பதையும், சான்றிதழ் சரிபார்ப்பு தேதி, நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும்.

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க தடை – மீறினால் ரூ.1,000 அபராதம்

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுக்க தடை – மீறினால் ரூ.1,000 அபராதம்

ரயில்நிலையங்களில் ரீல்ஸ் எடுப்பது தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

மீறினால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆபத்தான ரீதியில் ரீல்ஸ் எடுப்பது விபத்துகளுக்கே வழிவகுக்கிறது.
ரயில்வே போலீசார் சி.சி.டி.வி. மூலம் கண்காணித்து வருகின்றனர்.
புகைப்படம் எடுக்க அனுமதி உள்ளது, வீடியோ எடுக்க இல்லை.

ஆடி அமாவாசை 2025: தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்!

ஆடி அமாவாசை 2025: தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்!

ஆடி அமாவாசை இன்று (ஜூலை 24) முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய இது மிக முக்கியமான நாள்.

அமாவாசை திதி இன்று அதிகாலை 3.06 மணிக்கு துவங்கி, நாளை (ஜூலை 25) அதிகாலை 1.48 மணி வரை நீடிக்கிறது. தர்ப்பணம் செய்யும் போது, ராகு காலம் மற்றும் எமகண்டத்தில் தவிர்க்க வேண்டும்.

இன்று:

எமகண்டம்: காலை 6.00 முதல் 7.30 மணி வரை
ராகு காலம்: மதியம் 1.30 முதல் 3.00 மணி வரை

தர்ப்பணம் செய்ய ஏற்ற நேரம்:

காலை 7.35 மணி முதல் 12.00 மணி வரை தர்ப்பணம் செய்யலாம்.

முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தி, தர்ப்பணம் செய்தால் குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் என நம்பப்படுகிறது.

Gold Rate Decreased Today Morning (24.07.2025)

Gold Rate Decreased Today Morning (24.07.2025)

The cost of gold has decreased by Rs. 125 per gram on Thursday Morning (24.07.2025). The cost of the gold rate has decreased by Rs. 1000 per sovereign.

The gold rate has decreased and one sovereign is worth Rs. 74040.00 and a gram is Rs. 9255.00.

The cost of 1 gram of pure gold (24 K) is now Rs. 10096.00.

A kilo of silver is priced at Rs. 128,000.00 and a gram is worth Rs. 128.00.