தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை_http://tnau.ucanapply.com என்ற இணையதள முகவரியில் இன்று முதல் 8.06.2025 வரை இணையதளத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
அனைத்து நாட்களும் 24 மணிநேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்திருக்க அனுமதி நீட்டித்து அரசாரணை வெளியீடு 10க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கும் கடைகள் 24 மணிநேரமும் செயல்படலாம்; ஜூன் 4-ம் தேதியுடன் அனுமதி முடிவடையும் நிலையில், ஜூன் 05ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் (08.05.2025) வியாழக்கிழமை எட்டாம் நாள் உற்சவத்தில் ஒளிவு வைபவம் வான வேடிக்கைகளுடன் கோலாகலமாக நடைபெற்றது.
திருவண்ணாமலை ரோட்டரி கிளப் RID 3231 ஐச் சேர்ந்த ரோட்டரி மாவட்டத் தலைவர் (சுகாதார சேவைகள்) டாக்டர் கே. சாய் பிரசன்னா சம்பத்குமார் மேமோகிராமில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு முகாமில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினார்.
இந்த விழிப்புணர்வு முகாம், பெண்களிடையே மார்பக புற்றுநோயின் முக்கியத்துவம் மற்றும் பரிசோதனையின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் ரோட்டரி கிளப் ஆஃப் ஈகிள் டவுன், திருக்கழுகுன்றம் சார்பில் நடத்தப்பட்டது. கிளப் தலைவர் Rtn. லட்சுமி சண்முகசுந்தரம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பெண்கள் பங்கேற்று பயனடைந்தனர்.