வேலூர் காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து!
விழுப்புரத்திலிருந்து தினமும் அதிகாலை 5:35 மணிக்கு விழுப் புறப்படும் வண்டி எண் 16854 விழுப்புரம் - திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் 18-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது.
மறு மார்க்கத்தில் தினமும் மதியம் 1:40 மணிக்கு திருப்பதியில் இருந்து புறப்படும் வண்டி எண் 16883 திருப்பதி - விழுப்புரம் முன்பதிவு இல்லா எக்ஸ்பிரஸ் ரயில் காட்பாடியில் நிறுத்தப்பட்டு மாலை 4:30 மணிக்கு திருப்பதி நோக்கி புறப்பட்டுச் செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.