இந்த கல்வியாண்டிற்கான காலாண்டுத் தேர்வுகள், செப்டம்பர் மாதம் 2 வது வாரத்தில் தொடங்கி 27 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதியும், 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 18 ஆம் தேதியும், காலாண்டு தேர்வுகள் தொடங்கி செப்டம்பர் 27 ஆம் தேதி முடிவடைகிறது.

தேர்வுகள் முடிந்தபின், செப்டம்பர் 28 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3 ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *