சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடியில் இன்று (09.02.2024) மின் நிறுத்தம் இல்லை!
சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்பு அத்தியாவசிய காரணமாக இன்று (09.02.2024) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது நிர்வாக காரணங்களால் மறு தேதி குறிப்பிடாமல் மின் தடை ஒத்தி வைக்கப்படுகிறது. இதனால், மேற்கண்ட துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று வழக்கம்போல மின்விநியோகம் இருக்கும் என செயற்பொறியாளர் திரு ஆரோக்கிய அற்புத ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.