வேலூர் மாநகரில் சுற்றி திரியும் மாடுகளை வேலூர் சிறை கைதிகளால் பராமரிக்கப்படும் என மேயர் அறிவிப்பு!
வேலூர் மாநகரில் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்த அவற்றை வேலூர் சிறையில் கைதிகளால் பராமரிக்கப்படும் மாடுகளுடன் ஒப்படைக்கப்பட உள்ளது. வேலூர் மாநகரில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கப்பட்டு முதல் முறை அபராதமும், பின்னர் வழக்குப்பதிவும் செய்யப்படும். 3வது முறையாக மாடுகள் பிடிக்கப்பட்டால் அதை சிறையில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என மேயர் திருமதி.சுஜாதா தெரிவித்துள்ளார்.