தொலைந்த அல்லது திருடு போன செல்போன்கள் குறித்து புகார் அளிக்க வேலூர் மாவட்ட காவல்துறையினர் ‘செல் டிராக்கர்’ என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர்.

அந்த செயலில் தொலைந்த செல்போன் விவரங்கள் குறித்து புகார் அளித்தால் கண்டுபிடித்து தரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 9486214166 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு உரிமையாளரின் விவரத்துடன் IMEI எண்ணை அனுப்பி புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் தொலைந்த செல்போன் குறித்து வாட்ஸ்அப் அல்லது செயலி மூலம் புகார் அளித்தாலே செல்போன் கண்டுபிடித்து தரப்படும் என்றும் காவல் நிலையம் செல்லத் தேவையில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *