பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 10 – ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.இ, பி.டெக்., இடங்களில் சேர்வதற்கு 2.48 லட்சம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். பொறியியல் மாணவர் சேர்க்கை 2024 காலஅட்டவணையின்படி, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 12-ம் தேதி ஆகும். ஜூன் 12-ம் தேதி அன்று ரேண்டம் நம்பர் எனப்படும் சமவாய்ப்பு எண் மாணவர்களுக்கு ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகு ஜூன் 13 முதல் 30-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைனிலேயே நடைபெறும். அதைத்தொடர்ந்து, ஜூலை 10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *