தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
.
அதன்படி, ஜவ்வாது மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக உத்திரகாவிரி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மேல்அரசம்பட்டு மலைப்பகுதியில் தற்போது வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு வட்டம், ஓடுகத்தூரை அடுத்த மேல்அரசம்பட்டு கிராமத்திலிருந்து உத்திரகாவிரி ஆறு உற்பத்தியாகிறது. இந்த ஆறு ஒடுகத்தூர், அகரம்சேரி வழியாக பள்ளிகொண்டா பாலாற்றில் கலக்கிறது.

இந்த வெள்ளப் பெருக்கினால் உத்திரக்காவிரி ஆறு செல்லக்கூடிய பகுதியான ஓடுகத்தூர், அகரம், மகமதுபுரம், அகரம்சேரி ஆகிய பகுதிகளை சுற்றி உள்ள சுமார் 1000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும், அப்பகுதியைச் சுற்றி இருக்கும் விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயரக்கூடும் எனவும், இதனால் அனைத்து விவசாயமும் செழிப்புடன் வளரும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *