vellore-city-logo

Vellore Info

Tourism

Emergency

Info Guide

Education

Business

Hospitals

Govt. Info

Travel Info

Social Networks

Festivals

Spiritual Calendar

Beauty Tips

Trade Info

More Info

World Info

Health Care

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!

கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்!!

நிலநடுக்கத்தால், குறுக்கும் நெடுக்குமாக,
பிளக்கப்பட்ட சாலையை பாருங்கள்.
குற்றுயிரும், குலையுயிருமாய் கிடந்த சாலையை,
மார்ச் 17ந்தேதி ஆரம்பித்து, ஆறு நாட்களுக்குப் பின்னர், பிளவை/சரிவை/
ஆழக்குழியை சரிசெய்து, மீண்டும் அந்த சாலையிலே போக்குவரத்தை,
ஏற்படுத்திய விதம் நம்மைஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

10 THINGS TO EMULATE FROM ஜப்பான்

ஜப்பானிய நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையிலிருந்து
நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 10 படிப்பினைகள்.

1. THE CALM-அமைதி

நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் அல்லது இழப்பை தாங்க
முடியாமல் ஒப்பாரி வைத்து அழும் ஒரு காட்சியைக் கூட
காண முடியவில்லை. இழந்த வ‌ருத்தமும், சோகமும் அப்பிய
முகங்களினோடு தான் மக்களை பார்க்க முடிந்தது.

2.THE DIGNITY-கண்ணியம்

Disciplined queues for water and groceries.
 Not a rough word or a crude gesture.
தண்ணீருக்காகவும், பொருட்களுக்காகவும், சீராக, ஒழுங்காக
வரிசையில் நின்று பொருட்களை வாங்கிய விதம்.
முண்டி-யடித்துக் கொண்டும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும்,
"எனக்கு கிடைக்கவில்லையே" என வசை மாறி பொழிந்துக்
கொண்டும் யாரும் நடக்கவில்லை.

3. THE ABILITY-ஆற்றல், திறமை

The incredible architects, for instance. Buildings swayed but didn’t fall.
நம்ப முடியாத கட்டிடகட்டமைப்பு. கட்டிடங்கள் கொஞ்சம்
ஆட்டங்கண்டாலும், அப்படியே நிலைகுலைந்து சரியாமல்,
இருந்த நிலை. அதை அப்படி கட்டிய திறமைமிக்க வல்லுனர்கள்.
நம் பகுதியில், மறுபாதி கட்டிக் கொண்டிருககும் பொழுதே,
முந்தைய பாதி இடிந்து விழும் அபாயத்தில் தான் நம்
காண்டிராக்டர்கள் நடந்து கொள்கிறார்கள். (எல்லோரும் அல்ல).

4. THE GRACE-நல்ல எண்ணம்/நற்பண்பு



People bought only what they needed for the present,
 so everybody could get something.
எது இன்றைக்கு வேண்டுமோ/அன்றைய தேவையோ, அதை
மட்டுமே வாங்கியது. இதன் மூலம், மற்றவர்களுக்கும் கிடைக்க
ஏதுவாய் அமைந்தது. பதுக்கல்/கள்ள மார்க்கெட்டில் விலை
உயர்த்தி விற்பது போன்ற செயல்கள் நடைபெறவில்லை

5. THE ORDER-ஒழுங்கு/கட்டுப்பாடு

No looting in shops. No honking and no overtaking on the roads.
 Just understanding.

சந்தடி சாக்கில், குழப்பமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு,
சூறையாடலும், கொள்ளையடித்தலும் நடக்கவில்லை.
கார் ஹார்னை காது செவிடாகும் அளவிற்கு அடித்து, ரோட்டில்
ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியில் மோசமாக நடந்து
கொள்ளாமை. ஒருவரை ஒருவர் முந்திச் செல்லாமல் இருந்தது.
நன்றாக, ஒருவரை ஒருவர் புரிந்து நடந்து கொண்டது.

6. THE SACRIFICE-தியாகம்/அர்ப்பணிப்பு

Fifty workers stayed back to pump sea water in the N-reactors.
How will they ever be repaid?
 50 ஊழியர்கள் அணு உலை இடத்திலேயே தங்கியிருந்து,
உலைகளை குளிர்விப்பதற்காக, கடல் தண்ணீரை வாரி
இறைத்தது. அப்படிப்பட்டவர்களுக்கு, எப்படிப்பட்ட
கைம்மாறு செய்யப் போகிறார்கள்?

7. THE TENDERNESS-அன்பு/கருணையின் அடிப்படையில்

மக்களின்நலன் காத்து பேணுதல ்
Restaurants cut prices. An unguarded ATM is left alone.
The strong cared for the weak.
உணவகங்கள் சாப்பாட்டு விலையை குறைத்துக் கொண்டன.
ஏ.டி.எம்(தானியங்கி பண பட்டுவாடா கருவி)
எந்த வித பாதுகாப்புமின்றி, தனித்து விடப்பட்ட
நிலையிலும் பாதுகாப்பாக இருந்தது.
பலம் வாய்ந்தவர்கள், பலவீனர்களை கவனித்து கொண்டது.

8. THE TRAINING-பயிற்சி



The old and the children, everyone knew exactly what to do.
And they did just that.
வயது முதிர்ந்தவர்களும், குழந்தைகளும்,என்ன செய்ய வேண்டு-
மென்பதை அவரவர் அறிந்து வைத்திருந்தது/அதன்படி நடந்து

9. THE MEDIA-

பத்திரிக்கை/ரேடியோ/தொலைக்காட்சிகள்நடந்தவிதம்
They showed magnificent restraint in the bulletins.
No silly reporters. Only calm reportage.
பத்திரிக்கை/ரேடியோ/தொலைக்காட்சிகள் நடந்து கொண்ட‌
விதம். செய்தித்தாள்களிலும், செய்தி அறிக்கைகளிலும், சுயகட்டுப்-
பாட்டோடு நடந்துக் கொண்டது. “நான்”, “நீ” என்று போட்டி போட்டு
செய்தி வெளியிடாமல், அமைதியான முறையில் செய்தி
வெளியிட்டார்கள். நம் சேனல்கள், "என்னால் தான் இந்த
நிலநடுக்கமே நடந்தது" என்றும், “இதை வெளியிட்ட முதல் சேனல்
நாங்கள் தான்” என்று மார்தட்டிக்கொண்டு நடந்திருப்பார்கள்.

10.THE CONSCIENCE-

மனசாட்சியின் அடிப்படையில் நடந்துகொண்டது.
When the power went off in a store,
people put things back on the shelves and left quietly.
சூப்பர் மார்க்கெட்டில், மின்சாரம் நின்று போனவுடன், எடுத்த
பொருட்களை அந்தந்த அலமாரிகளிலேயே திரும்ப வைத்து
விட்டு, அமைதியாக திரும்பியது.

ஜப்பான் மக்களின்



மனஉறுதியும் கடின உழைப்பும் தியாகமும்

எப்படிப்பட்ட இழப்பாக இருந்தாலும் அதை

ஈடு செய்யும் என்பது மீண்டும் ஒருமுறை

மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

மு.சுகுமார்